பதிவு செய்த நாள்
14
டிச
2016
02:12
சுறுசுறுப்புடன் பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!
சுக்கிரன் டிச.29ல் கும்ப ராசிக்கு மாறினாலும், அவரால் மாதம் முழுவதும் நற்பலன் கிடைக்கும். 11ம் இடத்தில் உள்ள குருவும் தொடர்ந்து நற்பலன் தரக் காத்திருக்கிறார். புதன் டிச.19ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார்., அதன் பின் ஜன.8ல் தனுசுவிற்கு செல்கிறார். இந்த சமயத்தில் அவரால் தரப்படும் நன்மையின் அளவு குறையலாம். சூரியன் ராசியில் இருந்து 2ம் இடத்திற்கு செல்வதால் சுமாரான பலனே கிடைக்கும். ராசியில் இருக்கும் சனியால் நற்பலன் கிடைக்காவிட்டாலும், அவரது 3,7,10ம் பார்வைகளால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் மற்றும் குருவின் பலத்தால் பொருளாதார வளம் மேம்படும். கையில் எப்போதும் பணம் புழங்கும். நீங்கள் எடுத்த செயலைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். சமூகத்தில் மரியாதை நல்ல முறையில் அமைந்திருக்கும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக டிச.25,26,27 ல் அவர்களால் நன்மை அதிகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். டிச.21,22ல் உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். ஜன.2,3ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு முதலியன இனி இருக்காது. கண் தொடர்பான பிரச்னை உருவாகலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை உண்டாகும். சூரியனால் அவ்வப்போது அதிக செலவு ஏற்படலாம். டிச.23,24,28,29,30ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். ஜன.7,8ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் தொழிலில் போட்டி குறுக்கிடும்.
பணியாளர்களுக்கு குரு சாதகமான இடத்தில் இருப்பதால் கோரிக்கைகள் நிறைவேறும். பணியிடத்தில் சுதந்திர மனப்பான்மையுடன் செய ல்படுவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் டிச.19 முதல் ஜன.8 வரை முக்கிய பொறுப்புகளை ய õரையும் நம்பி பணிகளை ஒப்படைக்க வேண்டாம். மேல் ஒதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். டிச.19,20 சிறப்பான நாட்களாக அமைந்திருக்கும்.
கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஆதாயம் அடைவர்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது நல்லது. போட்டிகளில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப் படும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் காணலாம்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். பணப்பயிர்களில் முத லீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை இம்மாதம் தள்ளிப் போடுவது நல்லது. வழக்கு விவகாரங்களில் சுமாரான பலன் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெரு மிதம் உண்டாகும். டிச.29க்கு பிறகு உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜன.9,10 சிறப்பான நாட்களாக அமையும். டிச.31, ஜன.1ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டிலிருந்து உதவி கிடைக்கும். ஜன.8க்கு பிறகு அக்கம்பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு வரலாம்.
நல்ல நாள்: டிச.19,20,21,22,25,26,27,31, ஜன.1,7,8,9,10
கவன நாள்: டிச.16, ஜன.11,12 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்வு குறித்த பேச்சு வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சூரியனை தினமும் வணங்குங்கள். விநாயகரை தினமும் வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காளி கோவிலுக்கு செல்லுங்கள்.