பொதுவாக, பவுர்ணமி தினங்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது. வருடத்தின் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் திருவிளக்கு பூஜையினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை ஞானநூல்கள் விவரிக்கின்றன.
சித்திரை - தானிய வளம் உண்டாகும். வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமண பாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் நிர்வத்தியாகும் கார்த்திகை - நற்பேறு கிட்டும் மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். மாசி - துன்பங்கள் நீங்கும். பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரண்டு கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் கார்த்திகையைக் கொண்டாடுவது மரபு.