கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தென்னாடுடைய சிவபெருமானின் அருட்காட்சம் நிறைந்த திருவடிவங்களை அறுபத்துநான்காக வகுத்துவைத்துள்ளனர், நம் முன்னோர். அவற்றுள் அதிகம் வழிபாட்டில் திகழும் மூர்த்தங்கள் பன்னிரண்டு. இந்த சிவவடிவங்களை வழிபட்டால் என்னென்ன பலன்?ருத்ரன்: வல்லமை மிகும்உமா மகேசுவரர்: கல்யாண வரம் கிடைக்கும்.அர்த்தநாரீசுவரர்: தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும்சோம சுந்தரர்: நன் மக்கட்பேறு வாய்க்கும்தட்சிணாமூர்த்தி: ஞானமும் மன அமைதியும் ஸித்திக்கும்பிட்சாடனர்: காமம் அகலும்கங்காள மூர்த்தி: வைராக்கியம் கிடைக்கும்காமதகன மூர்த்தி: மெய்ஞானம் வந்துசேரும்சரபர்: அகங்காரம், தீவினைகள் அழியும்நீலகண்டர்: சிந்தனை ஒருமுகப்படும்; செயல்கள் சிறக்கும்பைரவர்: வீண் பயம் நீங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்நடராச பெருமான்: ஐம்புலன்களையும் அடக்கலாம்.