செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீட்டில் தெளிக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 03:01
தினமும் பசுஞ்சாணத்தினால் வீட்டை மெழுகுதல் அக்காலத்தில் மரபு. சாஸ்திர ரீதியாக எல்லா வகையான தீட்டுகள், தோஷங்களைப் போக்கி செல்வவளம் பெருகச்செய்யும். விஞ்ஞான ரீதியாக சிறந்த கிருமிநாசினியாகவும், நோய்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் உடையதாகவும் கோமியம் போற்றப்படுகிறது. இன்றைய நடைமுறையில் இது இயலாத ஒன்றாகி விட்டதால் செவ்வாய், வெள்ளிகளில் வீட்டில் கோமியம் தெளிப்பதாவது சிறந்த பலனளிக்கட்டும்.