கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே கோயிலில் சாமி தரிசனம் கிட்டும் என்பது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2017 03:01
பகவானுடைய அருள் இருந்தால்தான் பகவானின் தரிசனம் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, எதற்குமே அப்படித்தான். மனிதப் பிறவி அடைந்தவனுக்கு, ஆன்மிகத்தில் ஏற்படும் லாபங்கள், இவன் முதலில் ஆசைப்படணும், இது இவனுக்கு கிடைப்பதற்கு பகவானுடைய கிருபை தேவைப்படணும். சத் சங்கமும் தேவை. இந்த மூன்றும் இருந்தால்தான் அவனுக்கு அது கிடைக்கும். இதில் குறிப்பாக, பகவானின் தரிசனம் என்பதற்கு பகவத் சங்கல்பம் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு நமக்கு தகுதி வேண்டும். ஆசைப்படுவது என்பதற்கு மணிவாசகப் பெருமான் சொல்வார், அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று! அதுமுற்றிலும் உண்மை.