திருவெண்காடு, சுவேதாரண்யேஸ்வர் கோயிலில் அகோரமூர்த்திக்கு ஞாயிறு தோறும் இரவு 12 மணிக்கு அகோர பூஜையும், பூர நட்சத்திர தினத்தன்று அகோர மூர்த்தி பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜை சகலவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்தி படைத்தது என்பது ஐதீகம்.