சிவன், முருகன் தலங்களில் மலைக்கோவிலாக அமைந்த திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும், பவுர்ணமியன்று இங்கும் வலம் நடக்கிறது. சுவாமி சன்னிதியை சுற்றி 108 முறை வலம் வருகின்றனர். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.