ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2017 12:02
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கா,ரெங்கா’ கோஷத்துடன் தைத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(8ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ரெங்கா,ரெங்கா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.