பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
04:04
இந்தியாவில் என்ன நடக்கும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள்.
*புயலால் அடிக்கடி மழை பெய்யும். நெல், கோதுமை விளைச்சல் அதிகரிக்கும்.
*கடல் கொந்தளிப்பால் உயிர், பொருள் சேதம் ஏற்படலாம்.
*ரூபாய் மதிப்பு உயரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
*வெளிநாட்டு முதலீட்டால் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
*ராணுவத்துறை பலப்படும். புதிய ரக போர் விமானம், ஏவுகணை வாங்கப்படும்.
*தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வர்.
* தங்கம், வெள்ளி, வைரம் விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு, வாசனை திரவியங்கள், தேயிலை, காபி, ஏலக்காய், முந்திரி, பூக்கள் விலை அதிகரிக்கும்.
*கல்வித்தரம் சர்வதேச அளவிற்கு உயர்த்தப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
*நீதித்துறை சுதந்திரமாக செயல்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும்.
*மருத்துவத்துறை நவீன மயமாக்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பால் நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.