பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வெயிலில் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், கோவில் வளாகத்தில், வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடிய வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் வளாகத்தில் முற்றிலும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, 10:00 மணிக்கு மேல் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இதேபோல் , வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவிலிலும், பக்தர்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, வளாகத்தில் நடந்து செல்ல, வெள்ளை வண்ணம் பூசவேண்டும் என, பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.