பதிவு செய்த நாள்
11
மே
2017
12:05
திருச்சி: சிருங்கேரி சாரதா பீடத்தின் அதிபதி, ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், இளைய பட்டம், ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், நேற்று முன் தினம் மாலை, ஸ்ரீரங்கம் வந்தனர். உள்ளூர் பக்தர்களும், மடத்தின் நிர்வாகிகளும், பூரண கும்பத்துடன் வரவேற்றனர். பின், சுவாமிகள் இருவரும், பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் அருளாசி வழங்கினர். அம்மா மண்டபத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் இருவரும் தங்கியுள்ளனர்.நேற்று காலை, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். மாலையில், உலக நன்மைக்காக, சந்திர மவுலீஸ்வர பூஜை நடத்தினர். 13ம் தேதி வரை, தினமும் மாலையில் இந்த பூஜை நடத்தப்படுகிறது.