சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2017 03:05
இன்னின்ன கிரகங்கள் லக்னத்தில் இருந்தோ, சந்திரன் நின்ற ராசியில் இருந்தோ, இன்னின்ன இடத்தில் இருந்தால் இன்னின்ன பலன்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சந்திரன் 1 ல் இருந்தால் இந்த பலன் என்றும், 2,3 என இருந்தால் இன்ன பலன் என்றும், லக்னத்தில் இருந்து 1,2,3 என அந்தந்த இடங்களில் இருந்தால் என்ன பலன் என்றும் ஒரு கணக்கு உண்டு. லக்னத்தில் இருந்து கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதன் பலனை ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லலாம். சந்திரனில் இருந்து இந்த கிரகங்கள் இருக்கும் பலனை பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்கிறோம். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளம்தான், நான் மேஷ ராசி, மீன ராசி என்று நம்மைக் குறித்துச் சொல்கிறோம். மீனத்தில் இருந்து எட்டாம் இடமான துலாத்தில் சந்திரன் இருந்தால் கெடு பலன்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்வதால், அந்தக் காலங்களில் பிரயாணங்கள் போன்ற முக்கிய மான சில செயல்களைத் தவிர்க்க வேண்டும். காரணம், மனகாரகன் சந்திரன். அப்போது நிதான புத்தி இருக்காது. தடுமாற்றம் இருக்கும். சில நேரங்களில் கிரக சாரங்கள் பலமாக இருக்கும்போது இது தெரியாது. பலவீனமாக இருக்கும்போது இது வெளிப்படையாகத் தெரியும். கூடியவரையில் சந்திராஷ்டம காலங்களில் புதிய காரியங்களைத் தவிர்ப்பது உத்தமம்.