காட்டில் அலைந்து கொண்டிருந்த ராமலட்சுமணரை முதன் முதலில் கண்ட ஆஞ்சநேயர், நீங்கள் யார்? பார்ப்பதற்கு முரண்பட்டவராக இருக்கும் நீ ங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? என கேட்டார். அதற்கு லட்சுமணர், எங்களிடம் என்ன முரண்பாடு கண்டாய்? என்றார். நீங்கள் இருவரும் விண்ணுலக தேவரைப்போல தென்படுகிறீர்கள். ஆனால், சாதாரண மனிதர்களைப் போல உங்களின் பாதம் தரையில் படுகிறது. தவசீலர்களாக ÷ தான்றுகிறீர்கள்! ஆனால், கையில் வில்லேந்தி நிற்கிறீர்கள். ஞானியாக காட்சியளித்தாலும் எதையோ பறிகொடுத்தவர் போல துக்கத்தில் இரு க்கிறீர்கள். இப்படி பலவிதமான முரண்பாடுகளை நான் காண்கிறேன், என்றார் ஆஞ்சநேயர். அவரின் பேச்சைக் கேட்ட ராமர் ஆச்சரியம் கொண்டார். தம்பியிடம், இவன் கற்றறிந்த பண்டிதனாக இருக்க வேண்டும். இவனோடு நட்பு கொள்வது நல்லது, என்று கூறினார்.