பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அருகில் நடக்கும் சிவபார்வதி, கிருஷ்ணர் பூஜையில் பங்கேற்க வடமாநில சாதுக்கள் குவிந்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே உள்ள பஜ்ரங்கதாஸ் சேவா மடத்தில் சிவன், பார்வதி, ராமர், சீதை, கிருஷ்ணர் பூஜை மற்றும் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கியது.இந்த பூஜையில் பங்கேற்க மத்திய பிரதேசம், பான்புரா பீடாதிபதி சுவாமி திவ்யானந்தா தீர்த்த சங்கராச்சாரியார் தலைமையில் உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து 200க்கும் மேலான சாதுக்கள் ராமேஸ்வரம் வந்தனர்.தொடர்ந்து 60 நாட்கள் நடக்கும் இப்பூஜையில் சங்கராச்சாரியார், சாதுக்கள் தினமும் அக்னி தீர்த்த கடல், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி பூஜையில் பங்கேற்க உள்ளனர். இப்பூஜை காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை தொடர்ந்து நடக்கும். ஏற்பாடுகளை பஜ்ரங்கதாஸ் சேவா மடம் நிர்வாகி சீதாராம்தாஸ் பாபா, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளீதரன் செய்துள்ளனர்.