கும்மிடிப்பூண்டி: நாகாத்தம்மன் கோவிலில், நேற்று, நான்காம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கவரைப்பேட்டை, உத்திரக்குளம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், நேற்று, நான்காம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது. அதை முன்னிட்டு, நுாற்றுக்கணக்கான பெண்கள், பால்குடம் எடுத்தனர்.அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆரத்தி நடைபெற்றன. மாலையில், அம்மனுக்கு கூழ் ஊற்றிய பின் அலகு போடுதல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. திருவிழாவில், கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு நாகாத்தம்மனை தரிசித்து சென்றனர்.