பதிவு செய்த நாள்
25
டிச
2017
12:12
ஓசூர்: சூளகிரியில், கனகதாசர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, குரும்பர் இன மக்கள், தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி கனகதாசர் சேவா சமிதி சார்பில், 530 வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, மேடுப்பள்ளி, கானலட்டி, இடவனஹள்ளி, ஒட்டையனூர், பேரிகை, வானமங்கலம், எர்ரண்டப்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள், 108 கலசங்களை தலையில் சுமந்தவாறு, மேள, தாளங்கள் முழங்க, சூளகிரி முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்றனர். அதைத்தொடர்ந்து, குரும்பர் இன மக்கள், 100க்கும் மேற்பட்டோர், தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். இதில், 7,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.