Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலையாட்டி பொம்மையும், தஞ்சை பெரிய ... கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா? கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு ...
முதல் பக்கம் » துளிகள்
காலபைரவருக்கு நள்ளிரவு பூஜை நடக்கும் கோவில்
எழுத்தின் அளவு:
காலபைரவருக்கு நள்ளிரவு பூஜை நடக்கும் கோவில்

பதிவு செய்த நாள்

08 ஜன
2018
03:01

கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில் பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில், அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான் விசேஷம். அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில் இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள், மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன். கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர் நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி. அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான். காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர், ’காமநாதீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும் அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத் துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான பைரவரை அனுப்பினார், சிவன்.

திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக நின்று, அவனை வதம் செய்தார், பைரவர். இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர் பிரதானம் பெற்றனர். இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர் லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து, எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர். மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறார், சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும். மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில் நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு. வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, ’வசிஷ்டேஸ்வரர்’ என்றும் பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது சூரிய ஒளி விழும். பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர் உள்ளனர். சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்; இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால் ஆறகழூரை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar