பதிவு செய்த நாள்
05
பிப்
2018
01:02
காஞ்சிபுரம்: கூரத்தாழ்வான் கோவிலில் இருந்து வெளியேறிய புகையால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோவிலில் இருந்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு, திடீரென புகை வெளியேறியது.அதை பார்த்த பொதுமக்கள், கோவில் உள்ளே சென்று பார்த்த போது, காய்ந்த சருகுகள், தென்னை மர காய்ந்த ஓலைகள், தேவையற்ற பொருட்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை என்பது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: கூரத்தாழ்வான் சாத்துமறை உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதில், வரதராஜ பெருமாள், மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, கூரத்தாழ்வான் கோவிலில், வேத பிரபந்த சாற்றுமறை உற்சவம் நடைபெறுகிறது. இதனால், கோவில் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதனால், தேவையற்ற பொருட்கள் எரிக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.