மேல்மருவத்துார்:வெண்மால் அகரம் கிராமத்தில் உள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மேல்மருவத்துார் அடுத்துள்ளது வெண்மால் அகரம். இங்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. மேலும், இக்கோவிலில் உள்ள ஆண்டாள், லஷ்மிநரசிம்மர், பத்மாவதி தாயார், விஷ்வக்சேனர், உடையவர், தேசிகன் கருடன் ஆகிய சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை, திருக்கல்யாண வைபவம், உற்சவர் திருவீதி உலாவும் நடந்தது.