Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ஆற்றல் பிறக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ஆற்றல் பிறக்கும்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். தற்போது உங்கள் ராசிக்கு 6ல் உள்ள கேதுவால் இந்த மாதம் சிறப்பானதாக அமையும்.  சுக்கிரன்  ஏப்.20 வரையும், புதன் மே4 வரையும் நன்மை தர காத்திருக்கின்றனர். செவ்வாய் மே 1ல் 6-ம் வீடான சாதகமான இடத்திற்கு வருவது  சிறப்பானது. கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. பகைவர் சதி உங்களிடம்  எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். மாத முற்பகுதியில்  முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். சூரியன் சாதகமற்று இருப்பதால் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  

குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன்  செயல்படுவர். குறிப்பாக ஏப்.25,26ல் அவர்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப்.21,22ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம்  மே1,2,3ல் அவர்கள் வகையில் மனக் கசப்பு வர வாய்ப் புண்டு. மே 3க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அரசு வகையில் இருந்து வந்த இடையூறு இனி இருக்காது. மே3க்கு பிறகு  முயற்சியில் தடை குறுக்கிடலாம்.  சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். ஏப். 23,24,27,28ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.மே 6,7,8ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  

பணியாளர்கள் சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  தனியார் துறையில் இருப்பவர்கள் கோரிக்கைகளை மே 4 க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். வேலையில் பொறுமை, நிதானம் தேவை. இருப்பினும் சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. ஏப். 18,19,20 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப்.20க்கு பிறகு போட்டிகள் அதிகமாகும். அவப்பெயர் உருவாகலாம்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனை பெறுவர். மே1க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மே4,5 ஆகிய நாட்களில் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டி, பந்தயங் களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள் வழிகாட்டுதலால் நன்மை காண்பர். மே 3க்கு பிறகு படிப்பில் கூடுதல் அக்கறை  தேவை.   

விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் கிடைக்கும். நெல், கேழ்வரகு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காணலாம்.
கால்நடைச்செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்ப வர்களின் எண்ணம் மே1க்கு பிறகு கைகூடும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லை மறையும்.  பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். குருவால் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். மே 3க்கு பிறகு குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஏப்.28,29ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். மே 9,10 ஆகியவை
அதிர்ஷ்டமான நாட்களாக அமையும்.  சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: ஏப். 18,19,20,21,22,25,26,29,30 மே 6,7,8,9,10
* கவன நாள்:ஏப்.14,15 மே 11,12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்:சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* வெள்ளியன்று லட்சுமிக்கு நெய்தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar