மானாமதுரை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ரூ.4.50 லட்சம் செலவில் புதிய ரிஷப வாகனத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை,ஆடி திருவிழாக்களின் போது பயன்படுத்தப்பட்டு வந்த பழமை வாய்ந்த ரிஷப வாகனம் மிகவும் பழுதடைந்த பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. ரூ.4.50 லட்சம் செலவில் புதிய ரிஷப வாகனம் தயாரிக்கும் பணி கோயிலில் கடந்த 2 மாதங்களாக நடந்தது. இந்நிலையில் பணி முடிவடைந்ததை ஒட்டிஇந்த வருடம் 6ம் திருநாள் மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளுவதற்காக ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டத்திற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.