கடலில் குளிக்க வந்தார் காஞ்சனமாலை. எழுகடல் குளக்கரையில் இருந்த முனிவரிடம், ""கடலில் நீராட விதிகள் என்ன? என்று கேட்டார். அதற்கு, அவர்கள், ""கற்புக் கனலே, கணவருடைய கை, மகனுடைய கை, பசுக்கன்றின் வால் ஆகிய இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைக்கையில் பிடித்துக்கொண்டு கடலாட வேண்டும் என்பது சாஸ்திரம்! என்றனர். காஞ்சனமாலையின் முகம் வாடியது! "கணவனும் இல்லை, மகனும் பிறக்கவில்லை! கன்றின் வால் தானா எனக்கு கதி! என்று வருந்தினார். மகளிடமும் முறையிட்டார். பிராட்டி மூலம் செய்தி அறிந்த ஈசன் மாமியாரின் துயர்தீர, இந்திர லோகத்தில் இந்திரனுக்கு நிகராய் வீற்றிருந்த மலயத்துவச பாண்டியனை தேவ விமானத்தில் வரவழைத்தார். மலையத்துவசனும் காஞ்சனமாலையும் கடலாடி முடிந்ததும் இறைவன் திருவருளால் தெய்வ விமானத்தில் ஏறி விண்ணுலகு எய்தினர். பின்னர் தடாதகை பிராட்டி இறைவனிடம் ""பாண்டிய மரபு அழியாதிருக்கத் தாங்களே அரசராகி மதுரையை ஆள்கின்றீர். இம்மரபு தழைக்க மகன் வேண்டாமா என்றார். இறைவனும் திருவுளம் கொண்டார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »