இராசராச பாண்டியனின் காமக்கிழத்தியருள் ஒருத்தி பாணபத்திரனின் மனைவி மீது பொறாமை கொண்டாள். இசையில் அவனைத் தோற்கடிக்க விரும்பினாள். ஈழ நாட்டுப் பாடகியை வரவழைத்தாள். காமவசப்பட்டு அறிவிழந்த பாண்டியனும் தன் காமக்கிழத்தியின் சொற்படி பாணபத்திரனை இசைப்போட்டிக்கு அழைத்தான்.
முதல்நாள் போட்டியில் பாண்டியன் நீதிக்கு மாறாக ஈழநாட்டுப் பாடகியின் இசையைப் பாராட்டி நாளையும் போட்டி தொடர்ந்து நடக்கும் என அறிவித்தான் இதனால் மனமொடிந்த பாணபத்திரனின் மனைவி இறைவனிடம் முறையிட்டான். ‘நீயே வெல்வாய்?’ என்ற திருவாக்கு எழுந்தது. மறுநாள் போட்டியிலும் பாண்டியன் நீதிக்கும் புறம்பாக ஈழநாட்டுப் பாடகியை பாராட்டவே சினம் கொண்ட பாணபத்திரனின் மனைவி, “நாளை இறைவன் முன் போட்டி நடக்கும். அங்கு யாரேனும் ஈழ நாட்டுப் பாடகியின் பாட்டைப் பாடினால் அந்தத் தீர்ப்பை என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்!” என்றார்.
அவ்வாறே மறுநாள் கோவிலில் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதியில் போட்டி நடந்தது. இறைவன் முன் நீதிக்கு மாறான தீர்ப்பு கூற முடியாத பாண்டியன் தன்னையும் மீறி பாணபத்திரனின் மனைவி பாடிய பாட்டைப் பாராட்டி விட்டான். ஈழநாட்டுப் பாடகியின் தோள் மீது பாணபத்திரனின் மனைவியை உட்காரவைக்குமாறு தீர்ப்பும் கூறினான். அப்போது அங்கு புலவர் வேடத்தில் வந்திருந்த இறைவன் “அற்புதம்! அற்புதம்! என்று கூறிப் பலரும் அறிய மறைந்தார். ஈசன் திருவிளையாடலை உணர்ந்தனர். உவகை கொண்டனர்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »