குலசேகர பாண்டியன் புலமை நிறைந்தவன். சங்கப் பலகையில் இடம் பெற்ற அரசன். அவனது புலமையைக் கேள்விப்பட்ட பெரும்புலவரான இடைக்காடர் தாம் இயற்றிய பிரபந்தத்தை அரசன் முன் பாடினான். புலமைப் பொறாமை கொண்ட பாண்டியன் பிரபந்தத்தை ரசிக்காது சிலைபோல் இருந்தான். இதனால் கோபம் கொண்ட இடைக்காடர் இறைவனிடம் முறையிட்டார். பாண்டியனுக்கு அறிவு புகட்ட திருஉளம் கொண்ட இறைவன், தேவியுடன் கோவிலில் இருந்து நீங்கி வைகையின் மறுகரையில் கோவில் கொண்டார். ஆலயத்தில் இறைவனைக் காணாது எதிர்கரையில் சங்கப்புலவர்களுடன் இறைவன் எழுந்தருளி இருப்பதைக் கண்டவர்கள் மன்னரிடம் அறிவித்தனர். அஞ்சி ஓடி வந்த அரசன் இறைவனைப் பணிந்து தான் செய்த பிழை யாது? என்று கேட்டான். இடைக்காடரின் புலமையை மதிக்காததை இறைவன் சுட்டிக்காட்டி மீண்டும் தம் கோவிலுக்கே திரும்பினார். பாண்டியனும் இடைக்காடருக்கு உரிய மரியாதைகளைச் செய்து சீர்வரிசைகள் பல வழங்கினான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »