பார்வதி தேவி சிவபெருமானின் சாபத்தால் மண்ணுலகில் பிறந்து செம்படவர் தலைவனின் மகளாய் வளர்ந்தாள். அவள் தக்கப் பருவம் எய்தியதும் இறைவன் தேவியை மணந்து சாபவிமோசனம் தரத் திருவுளம் கொண்டார். வலைஞன் வேடம் தாங்கி வந்தார். செம்படவத் தலைவன் வலைஞன் வேடம் தாங்கி வந்தார். செம்படவத் தலைவன் வலைஞன் வேடம் தாங்கிய இறைவனிடம் ‘இக்கடலில் கொடிய சுறாமீன் உள்ளது. அதைப் பிடித்தால் என் மகளை உனக்கு மணமுடித்துத் தருகிறேன் என்றான். இறைவனும் வலைவீசி சுறாமீனைப் பிடித்து வலைச்சியை மணந்தான். மணம் முடிந்ததும் இருவரும் மறைந்தனர். விண்ணில் மணக்கோலத்தில் சிவ பார்வதி காட்சி அளித்தனர்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »