கூன்பாண்டியன் சமணமதத்தைத் தழுவினான். அவனது மனைவி மங்கையர்க்கரசி சைவசமயம் சார்ந்தொழுகினாள். தன் கணவனைத் திருத்தி சைவத்தின்பாற் திருப்ப விரும்பிய அரசி, திருஞானசம்பந்தரின் துணையை நாடினார். சம்பந்தர் பெருமானும் மதுரைக்கு வருகை தந்து மடம் அமைத்துத் தங்கினார். பொறாமை கொண்ட சமணர் சம்பந்தர் மடத்திற்கு தீ இட்டனர். செய்தி உணர்ந்த சம்பந்தர் ‘இத் தீ பாண்டியர்க்கும் ஆகவே!’ என்றார். பையவே சென்று பாண்டியனைப் பற்றுக! எனப் பதிகம் பாடியதும், தீ பாண்டியனை அடைந்தது. சுரநோயாய் பற்றியது. சமண முனிவர்களால் அந்நோயைத் தீர்க்க முடியவில்லை. நோயால் துடித்த பாண்டியன் சம்பந்தர் பெருமான் அளித்த திருநீற்றினால் குணம் பெற்றான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »