பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
நாகர்கோவில் :சபரிமலைக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, கன்னியாகுமரியில், வியாபாரிகள் நேற்று (அக்., 24ல்)கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என, சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பெண்களே வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, சர்வ தேச சுற்றுலா தலமான கன்னியா குமரியில், அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், நேற்று (அக்., 24ல்) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரியில், கடற்கரை சாலை, ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகள் கடை களை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கடையடைப்பு காரண மாக, கன்னியாகுமரியே நேற்று (அக்., 24ல்) வெறிச்சோடி காணப்பட்டது.