பதிவு செய்த நாள்
30
நவ
2018
12:11
மூணாறு:சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள கேரள அரசை கண்டித்து, மூணாறில் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியினர் ஊர்வலம் நடத்தினர்.சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், நிபந்தனை இன்றி 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்தும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியினர் மாநிலத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேவிகுளம் சட்டசபை குழு தலைமையில் மூணாறில் நடந்த கண்டன ஊர்வலத்திற்கு, கூட்டணி கன்வீனர் முனியாண்டி தலைமை வகித்தார். காங்., மாநில துணைத் தலைவர் மணி துவக்கி வைத் தார். முஸ்லிம் லீக் இடுக்கி மாவட்ட துணைத் தலைவர் காதர்குஞ்சு, கேரளா காங்., மண்டல தலைவர் பாக்யராஜ், பார்வர்ட்பிளாக் மாநில பொதுசெயலாளர் வெள்ளத் துரைபாண்டி, காங்., தேவிகுளம் ஒன்றிய தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.