உலகத்தின் இருளை விலக்கும் ஜோதி வடிவான சூரியன் 12 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு ஜோதி புறப்பட்டு, இந்தியாவின் 12 இடங்களில் உள்ள லிங்கங்களை பூஜிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் 12 ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்தன. சிவனின் புகழ் பாடும் திருமுறைகளும் 12 ஆக உள்ளன. ’ஜோதி’, ’ஜோதிர்’ என்ற இரு வார்த்தைகளும் ஒன்று தான். வடமொழியில் சொல்லும் போது ’ர்’ சேர்ப்பது மரபு.