ஓம் என்ற பிரணவ மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாத பிரம்மாவின் தலையில் குட்டி, “இது கூட தெரியாமல் படைப்புத் தொழிலை எப்படி செய்ய முடியும்?” என அவரது பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டவர் முருகன். அது மட்டுமா! தன் தந்தைக்கும் அந்த மந்திரத்தின் பொருள் தெரியாமல் போக, அவரையும் மண்டியிட வைத்து உபதேசித்தவர். இந்நிலையில் குழந்தைகள் பெற்றவர்களின் முதுகின் மீது ஏறி அமர்ந்து யானை செல்வது போல பாவனை செய்யச் சொன்னால், எப்படி ஒரு ஆனந்தம் கிடைக்குமோ அந்த ஆனந்தத்தை சிவன் பெற்றார். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவான முருகனை வழிபட குழந்தைகள் சுட்டிகளாக துறுதுறுவென இருப்பர்.