புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சஹஸ்ர லிங்க பூஜை நடந்தது.புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு சோமவாரத்தை முன்னிட்டு, வாசவி மகிளா சங்கத்தினரால் சஹஸ்ர லிங்க பூஜை மற்றும் துளசி, நெல்லி மரம் பூஜை நடைந்தது.பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, சந்தனத்தில் லிங்கம் செய்ய கற்றுத் தந்து, 300 லிங்கம் செய்யப்பட்டது. பங்கேற்ற பெண்களுக்கு துளசி மாடம் இலவசமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, மகிளா சங்க தலைவர் சுமதி, செயலாளர் கீர்த்தனா, பொருளாளர் கோமளவள்ளி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.