Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
11:04

குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  

உங்கள் ராசியில் இருக்கும் சூரியன், புதன் நற்பலனை கொடுக்க மாட்டார்கள். அதே போல்  2-ல் உள்ள செவ்வாய், ராகு, 8-ல் உள்ள கேது, சனி ஆகியோரால் நன்மை கிடைக்காது. வீண்விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருக்கவும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பர்.  

குருவால் மே18க்கு பிறகு குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும்.  சுக்கிரன் ஜூன்3க்கு பிறகு சாதகமான இடத்திற்கு செல்வதால் சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் மேன்மை கிடைக்கும். ஜூ2,3,4ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம்.  

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும், பளுவும் அதிகரிக்கும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆனால் மே28க்கு பிறகு குருவின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை  காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மே 26,27,28 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன்3க்கு பிறகு தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  

வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் வகையில் மனக்கசப்பு ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். மே18க்கு பிறகு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  மே16,17,18, ஜூன்13,14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர்.  

கலைஞர்களுக்கு  முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மே 29க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். மே18க்கு பிறகு குரு பலத்தால் கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல கல்வி நிறுவனங்களில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகலாம். மே18க்கு பிறகு  கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம்  கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. அவ்வப்போது குடும்பத்தில் பிரச்னை வந்து மறையும். மே18க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர்,
குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலையில்  மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காணலாம். ஜூன்7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். மே19,20, ஜூன்15ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

சகோதரர்கள் வகையில் பணஉதவி கிடைக்கும். மே29,30ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன்9,10ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.  

உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

* நல்ல நாள்: மே 16,17,18,19,20,26,27,28,29,30 ஜூன் 2,3,4,7,8,13,14,15
* கவன நாள்: மே 21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு:
● குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பழம்
● காலையில் நீராடியதும் சூரியவழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.