Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பிள்ளைகளால் பெருமை கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை

பதிவு செய்த நாள்

14 மே
2019
11:05

ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை தருவார்கள். புதன் மே29ல் 11-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். ஜூன்4 வரை சுக்கிரன் மஷேத்தில் இருந்து நற்பலன் தருவார். ஆனால் 5-ல் உள்ள சனி,கேது ஆகியோரால் எந்த பலனும் பெற முடியாது. தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே 18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. அவர் மனஉளைச்சல், உறவினர் வகையில் வீண் பகையை தருவார்.

குடும்பத்தில் பொன், பொருள் சேரும். மனதில்  மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சூரியனால் எடுத்த காரியம் சிறப்பாக முடியும்.
சமூகத்தில் மதிப்பு உயரும். சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். சகோதரிகளால் நன்மை கிடைக்கும்.  புதன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். பெண்களால் நற்சுகம் உண்டாகும். குறிப்பாக ஜூன்9,10ல் அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன்5,6ல் விருந்தினர் வருகையும் அதனால் மனதிற்கு புதிய உற்சாகமும் பிறக்கும்.

ஆனால் மே 19,20, ஜூன் 15ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு புதனால் நற்பலன் கிடைக்கப் பெறலாம். பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும்.

ஜூன்2,3,4ல் சிறப்பான பலனை காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

வியாபாரத்தில் லாபத்திற்கு எந்த குறையும் இருக்காது.  வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மே28க்கு பிறகு  பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாயை பெறலாம். அதே நேரம் மே15, ஜூன்7,8,11,12ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே24,25ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் மனதில் இனம் புரியாத வருத்தம் இருக்கலாம். இருப்பினும் கேதுவால் அதனை எளிதில் முறியடிப்பீர்கள்

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பு நிலையை அடைவர். ஜூன்4க்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகமிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசி பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.  

பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள்  ஆதரவுடன் இருப்பர்.
சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும், சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. மே16,17,18 ஜூன்13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். மே26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மே 16,17,18,24,25,26,27,28, ஜூன் 2,3,4,5,6,9,10,13,14
* கவன நாள்: மே 29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,7,9
* நிறம்: பச்சை,சிவப்பு

பரிகாரம்:
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
● வெள்ளிக்கிழமை நாகதேவதை வழிபாடு

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar