சோழவந்தான்:மதுரை திருவேடகம் ஷீரடி சாய்பாபா கோயில் 10ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிவச்சாரியர்கள் யாக சலையில் புனித தீர்த்தக்குடங்களை வைத்து பூஜைகள் செய்தனர். மூலவருக்கு சிறப்பு ஆரத்தி, அபிஷேகங்கள் நடந்தன. சாய்பாபாவின் மகிமை குறித்து கோயில் நிர்வாகி வாசுதேவி பேசினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி முத்துசெல்வம் செய்திருந்தார்.