பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், சுற்றுச்சூழல் அதிகாரிகள், மலைக்கோவில் முழுவதும் ஆய்வு செய்து,கோவில் அலுவலர்கள், ஊழியர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி, அறிவுறுத்தினர்.
ஹிந்து அறநிலை துறையின் சார்பில், பசு மை கோவில் இயக்கம் சார்பில், தமிழகம் முழு வதும், 20 கோவில்கள் பசுமையாகவும், சுகாதாரமாகவும் மற்றும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என, திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், திருத்தணி முருகன் கோவில், பசுமை மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என, இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவின்படி சுற்றுச்சூழல் துறையில் இருந்து, முதன்மை ஆலோசகர் எம்.பி. ராஜசேகர், முதுநிலை ஆலோசகர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில், ஏழு பேர் குழுவினர் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நேற்று (ஜூன்., 12ல்), வந்தனர்.
மலைக்கோவிலில் உள்ள இலவச குளியல் மற்றும் கழிப்பறையை ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரம் இல்லாமல் இருந்ததை கண்டுபிடித்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். தொடர்ந்து, மலைக்கோவிலில் சேரும் குப்பையை உரமாக தயாரித்தும், மலைப்பகுதியில் உள்ள செடிகளுக்கு உரமாக போட வேண்டும்.
அதே போல், குளியல் அறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக்காமல், மலைப் பகுதியில் உள்ள செடிகள் பாய்ச்ச வேண்டும். பக்தர்கள் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்கு, உப்பு பொட்டலங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.இந்த பாக்கெட்டுகளை குப்பையில் கொட்டி மலைப்பகுதியில் கொட்டுவதால் செடிகள், மரங்கள் அழித்து விடுகின்றன. எனவே, உப்புகளை தனியாக சேகரித்து வைக்க வேண்டும்.
அதே போல், நெய் தீபத்தில் இருந்து எண்ணெயை வீணாக ஓழுகுவதை தடுக்க, எண்ணெய்யை தனியாக சேகரித்து வைக்க வேண்டும். மொத்தத்தில், மலைக் கோவில் முழுவதும் தூய்மை யாகவும், பசுமையாகவும், சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் அதிகாரிகள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.