உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது.
ஆண்டிற்கு ஐந்து முறை உற்ஸவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.6 வது முறையாக மார்கழி அன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு உற்ஸவர்களுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.எந்த சிவன் கோயிலிலும் தாழம்பூ சாற்றி வழிபாடு செய்வதில்லை. ஆனால் உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மட்டுமே தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்களால் சிவபுராணம், திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்பட்டது. ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.