ராமநாதபுரம்:ராமநாதபுரம் கோதண்ட ராமஸ்வாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் ஆறாம் நாளில் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் கோதண்ட ராமஸ்வாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவம் ஜூலை 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் ஸ்வாமி காலையில் பல்லக்கிலும், இரவு சிம்ம, குதிரை, கருட, ஆஞ்சநேய, தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஆறாம் திருவிழாவான நேற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு 7:00 முதல் 8:00 மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 12 ல் தேரோட்டமும் , ஜூலை 13 ல் தீர்த்தோற்ஸவம், இரவு தோளுக்கினியான் வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளி வீதியுலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் கே.பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர், விசாரணைதாரர் கண்ணன் செய்திருந்தனர்.