Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி ஆடி அமாவாசைக்கு 3 லட்சம் ... காரைக்கால் மாங்கனி திருவிழா: பிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு காரைக்கால் மாங்கனி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபுத்திர அய்யனார் கோயிலில் ஆனி முப்பழ அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிபுத்திர அய்யனார் கோயிலில் ஆனி முப்பழ அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
12:07

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்துாரில் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோயில், கேட்ட வரம் தரும் அம்பிகை வீரமாகாளியம்மன் கோயிலில் ஆனி மாத முப்பழ அபிஷேக திருவிழா நடந்தது. சேத்துாருக்கு மேற்கே 5 கி.மீ., தூரத்தில் கொல்லுாரணி தாமரை பொய்கை கரையில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆதிபுத்திரகொண்ட அய்யனார், கேட்டவரம் தரும் அம்பிகையான வீரமாகாளியம்மன், மாயாண்டி, மகாலட்சுமி, மாடசாமி, மாடத்தி, இருப்பசாமி, பாதாள கண்டியம்மன், ராக்சக்திஅம்மன், கன்னி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்கள் உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அய்யனார் கோயில்களிலேயே சைவ கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் முப்பழ திருவிழா நடப்பது வழக்கம். கடந்த வியாழன் கிழமை இரவு 226 விளக்கு பூஜை பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. 2 வது நாளான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இரவு 12:00 மணிக்கு மேல் பால், தயிர், நெய், விபூதி, குங்குமம், இளநீர், கும்பநீர் உட்பட 21 வகையான பொருட்கள் மற்றும் மா, பலா, வாழை அடங்கிய முப்பழ அபிஷேகம் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்கு பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar