ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம் தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆழ்ந்த தூக்கமே (சவுண்ட் சிலீப்) இதற்கு காரணம். நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால் இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம். என்ன தூங்க கிளம்பிட்டீங்களா.