Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) முயற்சியில் வெற்றி மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுக்கிரனால் யோகம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
13:15

இந்த மாதம் சனி, கேது, குரு,சுக்கிரன் யோகபலன் தருவர். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணியில் ஆற்றல் மேம்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குருபகவான் 5ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை. பொதுவாக குருபகவான் 5ல் இருக்கும் போது குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் புதனால் ஏற்பட்ட பிரச்னை, உறவினர் வகையில் கருத்து வேறுபாடு, பண இழப்பு முதலியன ஆக.21க்கு பிறகு மறையும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். குறிப்பாக ஆக.28,29ல் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.23,24,25ல் உறவினர் வருகையும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப். 3,4 ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். செப்.10க்கு பிறகு சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும் சுக்கிரனால் நன்மை கிடைக்கும். பணியில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின்  ஆதரவும், சகபெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். ஆக.21,22, செப்.17ல் எதிர்பாராத நற்பலன் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். புதனால்  ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன செப்.7க்கு பிறகு மறையும். அதன் பிறகு அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

வியாபாரிகளுக்கு சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும். செப்.7,8,9 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஆக.26,27,30,31ல் பண விரயம் ஏற்படலாம். முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

கலைஞர்களுக்கு நற்பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.
மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். இருப்பினும் குரு சிறப்பாக இருப்பதால் பின்னடைவு உண்டாகாது.   

விவசாயிகளுக்கு கிழங்கு வகைகள், நிலக்கடலை, கரும்பு, எள், கேழ்வரகு, மஞ்சள், பழங்கள், காய்கறிகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த நன்மை பெற இயலாது.

பெண்களுக்கு சுக்கிரனால்  குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். ஆக.21க்கு பிறகு உறவினர் மத்தியில் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.  சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். செப்.1,2ல் பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம்  வரப் பெறலாம். செப்.10,11ல் சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமை தேவை. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். செப்.10க்கு பிறகு   வேலைபளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். சூரியனால் வீண் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.

* நல்ல நாள்: ஆக.21,22,23, 24,25,28,29, செப்.1,2, 7,8,9,10,11,17
* கவன நாள்: செப்.12,13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5,7
* நிறம்: வெள்ளை,மஞ்சள்

பரிகாரம்:
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  புதன்கிழமையில் குலதெய்வ  வழிபாடு
●  ஞாயிறன்று ராகு கால துர்கை தரிசனம்

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாகத் திகழும் கன்னி ராசி அன்பர்களே! ராசிக்கு 11ல் உள்ள சூரியன் பொருளாதார வளத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.