Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:08

இம்மாதம் ராகு  சாதகமாக உள்ளார். மேலும் சுக்கிரன் செப்.10 முதல் கன்னி ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தரப் போகிறார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர்.

குருபகவான் 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை அல்ல. பொதுவாக குருபகவான் 4 ல் இருக்கும் போது மன உளைச்சல்,  அக்கம் பக்கத்தினர் வகையில் பகையை உருவாக்குவார்குடும்பத்தினருடன் மென்மையான அணுகுமுறை தேவை. வெளியுலகில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டாருடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். சுக்கிரனால் நன்மை கிடைக்கும். சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  முக்கியத் தேவைகள் பூர்த்தியாகும். ஆக.30,31ல் பெண்களால் நன்மை ஏற்படும். ஆக.26,27ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

செப். 5,6ல் உற்றார், உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட  வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் ஆக. 21க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம். அண்டைவீட்டார் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பும் சிலருக்கு ஏற்படலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டி கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.21க்கு பிறகு  இடமாற்றம் ஏற்படலாம். ஆக.23,24,25ல் எதிர்பாராத நன்மை அடைவீர்கள். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.7க்கு பிறகு உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண்கவலை வரலாம். செப்.10க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். வாடிக்கையாளர்களை தக்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்.   செப்.10,11 ல் பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உருவாகும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஆக.28,29, செப்.1,2 நாட்களில் தடைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனால் செப்.10க்கு பிறகு  வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

கலைஞர்கள் பெண்களால் முன்னேற்றம் காண்பர்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்.10க்கு பிறகு சமுக மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையிலேயே இருப்பர். எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.

விவசாயிகளுக்கு பழவகைகள், கீரை வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  பிடிப்பு நிலை இல்லாத நிலை இருக்கலாம். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.செப்.3,4ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். செப்.12,13,14ல் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வர். செப். 10க்கு பிறகு சுய தொழில் புரியும் பெண்கள் நன்மை பெறுவர்.

* நல்ல நாள்: ஆக.23,24, 25,26,27,30,31, செப்.3,4,10,11,12,13,14
* கவன நாள்: ஆக.18,19,20 செப்.15,16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:4,6
* நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்:
●  செவ்வாயன்று கேது பகவான் வழிபாடு
●  வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
●  புதனன்று பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar