சந்திராஷ்டமத்தில் சுபநிகழ்ச்சி செய்ய வேண்டுமானால் என்ன பரிகாரம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2019 03:09
நமது ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாமிடம் என்பது ஆயுளுக்கும், நமது சிந்தனைகளுக்குமான இடம். இந்த இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது பெரும்பாலும் கோபமூட்டும் சிந்தனைகளே ஏற்படுகிறது. நாம் சும்மாயிருந்தாலும் வலுவிற்கு ஏதாவது சண்டை வந்து நம் மனநிலை பாதிக்கப்படும். மாதம் ஒருமுறை இரண்டே கால் நாள் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. முதல் நாள் பதட்டம் அதிகமாக இருக்கும். இரண்டாம் நாள் 25 சதவீதமாகக் குறைந்துவிடும். இரண்டாம் நாளில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். முதல் நாள் செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் விநாயகருக்குத் தயிர் அபிஷேகம் செய்து அருகம்புல் சாத்தி வழிபட்டு செய்யலாம். கோபப்படாமல் இருந்து ஜெயித்து தான் காட்டுவோமே?