மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்.,29 முதல் அக்.,8 வரை நடக்கிறது.விழாவை முன்னிட்டு கோயில் கோபுரங்கள், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், ஆடி வீதிகள், பொற்றாமரை குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவில் மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. கொலுச்சாவடியில் உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.