பதிவு செய்த நாள்
02
அக்
2019
03:10
சென்னை:தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், சக்தி கொலு அமைந்துள்ளது, என, வடபழநி ஆண்டவர் கோவிலில், கொலுவை தரிசித்த மக்கள் கூறினர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி மூன்றாம் நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக, அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர் திருமகள், திரைப்பட நடிகை சச்சு ஆகியோர் பங்கேற்றனர். சக்தி கொலுவை தரிசித்த பொதுமக்கள் கூறியதாவது:தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சக்தி கொலு வைக்கப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, கதைகளாக கொலு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.திருமண வைபவம், வளைகாப்பு, பழங்கால கடைகள், கிராமத்து சூழல், கிரிக்கெட் விளையாட்டு, சுவாமி வீதியுலா, திருக்கயிலாயம், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரம், கல்விச்சாலை, சீதா கல்யாணம் உள்ளிட்டவை நேர்த்தியாக அமைந்துள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ பவானி நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை, 7:00 மணிக்கு, தைரியம் பெற சக்தி கொடு எனும் தலைப்பில், டாக்டர் உலகநாயகி பழனி சொற்பொழிவு நடந்தது.