பதிவு செய்த நாள்
28
அக்
2019
12:10
தேனி: தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தேனி சோமாஸ்கந்தர், பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஹோமம், பூஜைகள் நடந்தது. மூலவர் விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. சோமாஸ்கந்தர் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், பரிவாக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் அர்ச்சகர்கள் கணேச சர்மா, சங்கர் சர்மா செய்திருந்தனர். ஏராளமா பொதுமக்கள், பெண்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
* தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஷேச, பூஜைகள் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர்.
* தேனி - பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் மூவர், உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.
* அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில் சிறப்பு பூஜை அலங்கார அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் சீனிவாசப்பெருமாள் மலர் அலங்காரத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் ஆசி பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார்.
* போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. தொட்டராயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பிச்சாங்கரை கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகளும், போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளாசி பெற்றனர்.
* பெரியகுளம்: வரதராஜப்பெருமாள் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்களான வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
* பாலசுப்பிரமணியர் கோயில் மூலவர்களான பாலசுப்பிரமணியர், அறம்வளர்த்த நாயகி, ராஜேந்திர சோழீஸ்வரர் உட்பட உபதெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மீனாட்சியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசாநார் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில்,
* பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர்கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தது. * ஷீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
* லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.