பதிவு செய்த நாள்
30
டிச
2019
11:12
சபரிமலை:மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜன., 15ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
சபரிமலையில், மண்டல பூஜை முடிந்து, அடைக்கப்பட்ட நடை, இன்று மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்த பின், தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவக்கி வைப்பார்.
ஜன., 19 வரை, எல்லா நாட்களிலும், அதிகாலை, 3:15 முதல், 11:30 மணி வரை, நெய் அபிஷேகம் நடக்கும்.அனைத்து நாட்களிலும், காலை, 7:30 மணிக்கு உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10:00 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கும். ஜன., 15ல், மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு தீபாராதனைக்கு பின், பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும். அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகர சங்கரம பூஜை நடைபெறும். ஜன., 20 இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜன., 21- காலை, 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மகரவிளக்கு கால வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யும் பணி, பம்பை மற்றும் சபரிமலையில் தீவிரமாக நடந்து வருகிறது.