பதிவு செய்த நாள்
25
ஏப்
2020
04:04
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
பலன்: ஆண்டுக்கு ஒருமுறை வரும் அதிசயநாள் ‘‘அட்சய திரிதியை’’. ‘குறைவு இல்லாதது’ என்பது இதன் பொருள். இந்நாளில் தயிர்ச்சாதம் தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள். இந்நாளில் எதைச் செய்தாலும், அதன் பலன் ஆயிரம் மடங்காக நமக்கு வரும். சுயநலம் இன்றி ‘பிறருக்கு’ உதவுவது அவசியம். உணவு, உடை, கல்விக்கு உதவி, முதியவருக்கு பணஉதவி என தர்மம் செய்தால் குடும்பத்தில் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும். இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?