Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: பணப்புழக்கம் விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம்: பெண்களால் நன்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: பெண்களால் நன்மை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
09:06

இந்த மாதம் சனி, கேது 3ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். திடீர் வருமானம் கிடைக்கும். பெண்களால் நன்மையை எதிர்பார்க்கலாம்.  செவ்வாய் ஜூன் 17க்கு பிறகும், புதன் ஜூன் 21 - ஜூலை 3 வரையும் நற்பலன் தரும் இடத்தில் இருக்கிறார். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் மேம்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.

குருபகவான் 4ம் இடத்தில் இருக்கிறார்.  அவர் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகையை உருவாக்குவார்.  அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 3ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் நன்மையளிக்கும். எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.
குடும்பத்தில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கும்.  பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். செவ்வாயால் ஜூன் 17க்கு பிறகு அக்கம் பக்கத்தினரின் தொல்லை மறையும்.  உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூகத்தில் மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்களால் குடும்ப வாழ்வு சிறப்படையும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் வளர்ப்பில் இருந்த பிரச்னை மறையும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். ஜூன் 17க்கு பிறகு பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். ஜூன் 17க்கு பிறகு உடல்நிலை திருப்தியளிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை மேம்படும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலபதிர்களுக்கு பெண்களை பங்குதாரராக உள்ள நிறுவனம் வளர்ச்சி அடையும். பகைவரால் குறுக்கிட்ட இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும்.
* வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு,கமிஷன் தொழிலில் மனதில் எதிர்பாராத வகையில் அதிகப் பணம் புழங்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஜூன்2 –  ஜூலை 3 வரை சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடை இருக்காது. சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
*  ஐ.டி., துறையினர் வேலையில் திருப்தியுடன் ஈடுபடுவர். யாருடைய உதவியையும் நாடாமல் தானே எதையும் சாதிக்க விரும்புவர்.
* மருத்துவர்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
* வக்கீல்கள் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை காண்பர்.
* பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள்  ஜூன் 17க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* அரசியல்வாதிகளுக்கு ஜூன் 17க்கு பிறகு பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்
 * பொதுநல சேவகர்களுக்கு மனம் போல மக்கள் புகழ் பாராட்டு கிடைக்கும்.
 * கலைஞர்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. சேமிக்க வாய்ப்புண்டு.
 * விவசாயிகளுக்கு பாசிப்பயறு, எள், கரும்பு, கேழ்வரகு, சோளம் மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். ஜூன் 17க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.  நிலப்பிரச்னை மறையும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
* பால்பண்ணை தொழிலில் கால்நடை பராமரிப்பு செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.

சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் சிலர் ஜூலை 3க்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
* அரசு பணியாளர்கள் மேலதிகாரிகள், சகஊழியர்களிடம் அனுசரித்து போகவும். முக்கிய முடிவுகளை இப்போதைக்கு எடுக்காமல் இருக்கவும்.
 * தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது.
 * ஆசிரியர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மன வேதனை, நிலையற்ற தன்மை, வீண் விரோதம் முதலியன ஏற்படலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 3க்கு பிறகு நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

நல்ல நாள்:  ஜூன் 15,16,17,18,23,24,25,26,27,30 ஜூலை 1,4,5,11,12,13,14,15
கவன நாள்: ஜூன் 19,20 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6  நிறம்:வெள்ளை,சிவப்பு

பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்
* புதனன்று விரதத்துடன் குலதெய்வ வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar