Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மனக்கவலை தீர்ப்பான் மலையப்பன் மனக்கவலை தீர்ப்பான் மலையப்பன் புரட்டாசி விரதமிருந்தால் பெருமாள் அருள் கிடைக்குமா? புரட்டாசி விரதமிருந்தால் பெருமாள் ...
முதல் பக்கம் » துளிகள்
ஒரே நாளில் காசி ராமேஸ்வரம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
16:27

சாந்தநாதர் கோயிலுக்குச் சென்றால் காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.  பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ எனப்பட்ட இக்கோயில் நாளடைவில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. தற்போது ‘சாந்தநாத சுவாமி கோயில்’ எனப்படுகிறது. 


கிழக்கு நோக்கியிருக்கும் இவரை தரிசிப்பவருக்கு குடும்பத்தில் நிம்மதி, மனதில் சாந்தம் நிலைத்திருக்கும். சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் இருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியான அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளான இந்த அம்மனை வியாழக்கிழமையில் வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு.காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி சன்னதிகள் இங்குள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றினால் பிதுர் தோஷம், பாவம் நீங்கும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது.

துர்க்கையம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில்  குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை அகலும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு சர்க்கரையால் அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை மறையும். இதனை பக்தர்கள் தங்களின் கைகளால் செய்யலாம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரக தோஷம் விலகும். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன்,  பைரவர், அறுபத்து மூவருக்கு  சன்னதிகள் உள்ளன.


பல்லவன் குளக்கரையில் உள்ள. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயருக்கு  12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் திருமணத்தடை விலகும். வடைமாலை சாத்தினால் விருப்பம் நிறைவேறும்.


எப்படி செல்வது: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம்

தொடர்புக்கு: 99420 75863

 
மேலும் துளிகள் »
temple
மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி என்னும் பெயரில் சிவன் கோயில் உள்ளது.  இங்கு ‘அனவித்யாம்பிகை’  ... மேலும்
 
temple
சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தான். ... மேலும்
 
temple
 மகாவிஷ்ணுவின் அம்சமான இதை ‘அஸ்வத்த நாராயணர்’  என்று வழிபடுவர். அதிகாலையில் இதைச் சுற்ற உடல்நலம் ... மேலும்
 
temple
மலையைப் பொறுத்தது இது. திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்குகிறது. திருப்பரங்குன்றம் போல ... மேலும்
 
temple
சிவபெருமானே அடியெடுத்துக் கொடுக்க திருமுறை பாடல்களை பாடிய நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்களை ‘பாடல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.