ஒருராசியை சனி கடக்க இரண்டரை ஆண்டு ஆகும். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி 2020 நாளை (டிச.27) அதிகாலை 5:22 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 டிச.20 மாலை 5:23 மணி வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில் 2023 மார்ச் 29 முதல் ஆக.24 வரை கும்ப ராசிக்கு முன்னோக்கி செல்கிறார். 2023 ஆக.24 டிச.20 வரை மகர ராசியில் இருப்பார்.
பலன் தரும் பரிகாரங்கள் * சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல் * சனீஸ்வரருக்கு எள்ளுச்சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு படைத்தல் * மகாபிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை * வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையில் வழிபடுதல் * சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் நெய்தீபம் ஏற்றுதல் * சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்தபிரபுவை (கடைகளில் இந்த படம் கிடைக்கும்) வழிபட்டால் நன்மை உண்டாகும். * விஷ்ணு சகஸ்ர நாமம், அனுமன் சாலீஸா படித்தல் * நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தால் சனி தோஷம் குறையும். * ஏழைகளுக்கு நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டியை தானம் செய்தல் * பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்தல் * மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளுதவி செய்தல் * சனீஸ்வரர் நீதிமான் என்பதால் ஒழுக்கம், தர்மம், நீதி, நியாயத்தை பின்பற்றுவோரை தண்டிக்க விரும்ப மாட்டார். * தென்னிந்தியாவில் சனிக்கு காகமும், வடஇந்தியாவில் கழுகும் வாகனமாக உள்ளன. * சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போலக் கெடுப்பவருமில்லை என்றொரு பழமொழி உண்டு.
சனி ஸ்லோகம் நீலாஞ்சந ஸமாபாஸம் ரவி புத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் மை போல கருநிறம் கொண்டவரே! சூரிய பகவானின் புதல்வரே! யமனின் சகோதரரே! சூரியனுக்கும், சாயாதேவிக்கும் மகனாக வந்தவரே! மெதுவாகச் செல்பவரே! சனிபகவானே! உம்மை வணங்குகிறேன்.